விஸ்வரூபம் எடுத்த ரூட்டு தல விவகாரம்..மாணவருக்கு அரிவாள் வெட்டு ! பீதியுடன் பொதுமக்கள்
பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அடுத்த திருவள்ளூர் அருகே பச்சைப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மற்றொரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, திருவாலங்காடு, மணவூர், மோசூர், கடம்பத்தூர், திருவள்ளூர் ஆகிய பகுதியிலிருந்து சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரிக்கு மாணவர்கள் புறநகர் ரயிலில் பயணம் செய்து படித்து வருகின்றனர்.
ரூட்டு தல பிரச்சினையில் அவர்கள் கத்தி, அதிவாளுடன் மோதிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வந்தது. ஏற்கனவே ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று அறிவுரைகள் வழங்கி இருந்தனர். ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் அரிவாளுடன் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. எக்கனாமிக்ஸ் 3-ம் ஆண்டு படித்து வரும் படித்து வரும் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பர் இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு மின்சார ரயிலில் வந்தார்.
மேலும் செய்திகளுக்கு..ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து.. ஓபிஎஸ் உள்ளே - எடப்பாடி வெளியே ! மீண்டும் பரபரப்பு
அவர் ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது அங்கிருந்த மற்றொரு தரப்பு கல்லூரி மாணவர்கள் திடீரென தகராறில் ஈடுபட்டனர். இதில் இருதரப்பு மாணவர்களும் அரிவாள், கத்தியால் மோதிக்கொண்டனர். இந்த தாக்குதலில் மாணவர் தினேசின் தலையில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. திருவள்ளூர் துணைக் கண்காணிப்பாளர் சந்திரதாசன் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தனர்.
அதில் தக்கோலம் பகுதியைச் சேர்ந்த மாணவர் என்பது தெரியவந்தது. இசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடம்பத்தூர் காவல் நிலைய காவல் துறையினர் 10 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து 2 கத்திகளையும் பறிமுதல் செய்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர்கள் மோதலின்போது, ஒரு மாணவனை வேறு கல்லூரி மாணவர்கள் அடித்து துன்புறுத்தியதால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடைபெற்றது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மார்பு & விலா எலும்பில் காயம்.. சிசிடிவி காட்சி எங்கே? விசிகவுக்கு தொடர்பு?