காதலி தன்னை கழட்டி விட்டு சென்ற  ஆத்திரத்தில் அவரின் ஆபாசப்படங்களை அவரின் சகோதரிக்கு அனுப்பிய  வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்   சமீபகலாமாக பெண்களுக்கு எதிரான  வன்கொடுமைகள்  அதிகரித்துள்ளது.  முள் மீது சேலை விழுந்தாலும் அல்லது  சேலை மீது முள் விழுந்தாலும் சேதாரம் சேலைக்கு தான் என்பதுபோல காதலித்தாலும்  காதலிக்க மறுத்தாலும் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள்தான் என்ற நிலைதான் உள்ளது.  

காதலித்தவனை விட்டு விலகிய பெண் உயிருக்கு உயிராய் காதலித்த  காதலனே  மிக மோசமான முறையில் பழிவாங்கியுள்ள சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது .கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா தெருவைச்  சேர்ந்த ரூபன் என்பவர் ,  வீடு கட்டி விற்பனை செய்யும் பணி செய்து  வருகிறார் .  இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது . இந்நிலையில் ரூபனின்  நடவடிக்கைகள் பிடிக்காததால்  அந்த பெண் அவரை விட்டு விலகி உள்ளார் .  இதனால் ஆத்திரமடைந்த ரூபன் இருவரும் சேர்ந்து தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக  வலைதளத்தில் வெளியிடப்போவதாக கூறி அப்பெண்ணை மிரட்டி உள்ளார் .

 

ஆனால் அவர் அசைந்து கொடுக்கவில்லை, இதனால் அந்தப் புகைப்படங்களை அந்த பெண்ணின் சகோதரிக்கு  அனுப்பியுள்ளார் ரூபன். இதனையடுத்து  அந்த இளம் பெண்ணின் சகோதரி காவல் நிலையத்தில் புகார்  கொடுத்தார், அந்த புகாரின்  அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் ரூபன் ஆபாசப்படங்கள் அனுப்பியது உறுதியானது. எனவே ரூபன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழி வழக்குபதிவு செய்த போலீசார் ரூபனை கைது செய்து சிறையிலடைத்தனர்.