சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே ஒரு தனியார் கார் நிறுவனம் ஒன்று இருக்கிறது. அதனருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் சென்றனர். அவர்கள் வீசி சென்ற பொருளால் சத்தம் ஏற்பட்டது. இந்தத் தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மர்ம பொருள் வீசப்பட்ட இடத்தில் நின்ற கார் கண்ணாடிகள் சேதமடைந்தன.

 

உடனடியாக போலீசார் அந்தப்பகுதியில் இருந்த சிசிடிவி கேராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து போக்குவரத்து போலீசார் வாகன சோதனையை துரிதப்படுத்தி உள்ளனர். இந்தப்பகுதியில் அவர்கள் மர்மப்பொருளை வெடிக்க வைக்க வேண்டிய அவசியமென்ன?  என விசாரித்து வருகின்றனர். வெடிக்கப்பட்டது நாட்டு வெடிகுண்டு தான் என போலீசார் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது எதனால்..? வீசிச்சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.