23 வயது கள்ளக்காதலனுடன் 45 வயது பெண் உல்லாசமாக இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினரால் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், கண்ணம்பாளையத்தை சேர்ந்த 23 வயதானவர் கிருஷ்ணகுமார். இதே பகுதியில் தனியார் பேருந்து ஒன்றில் கண்டக்டராக பணியாற்றி வந்துள்ளார். அவரது பேருந்தில் பள்ளப்பாளையம் இந்திரா நகரை சேர்ந்த 45 வயதான ஷாலினி அடிக்கடி பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது கிருஷ்ணகுமாருக்கும் அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். கடந்த ஒராண்டாக இந்த கள்ளக் காதல் தொடர்ந்து ஷாலினியின் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் நேற்று மாலை ஷாலினி வீட்டிற்கு கிருஷ்ணகுமார் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட ஷாலினியின் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு இந்த சம்பவத்தை பற்றி அருகில் இருப்பவர்களிடம் கூறி கூட்டத்தை கூட்டியுள்ளார்.  அவர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியே வர கூறியுள்ளனர். இதனால் பயந்து போன ஷாலினி வீட்டின் பின் வழியாக தப்பி ஓடிவிட்டார். ஆனால், கிருஷ்ணகுமார் வீட்டிற்குள் மாட்டிக் கொண்டார்.

 
 
வெளியில் இருந்தவர்கள் நீண்ட நேரம் அழைத்தும் யாரும் வெளியே வராததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அபோது வீட்டின் உள்ளே கிருஷ்ணகுமார் தூங்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கிருஷ்ணகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடி கள்ளக்காதலி ஷாலினியை தேடி வருகின்றனர்.