புதருக்குள் இழுத்து சென்று 92 வயது மூதாட்டி பலாத்காரம்.. காவெறி பிடித்த வாலிபரை தேடும் போலீஸ்..!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் 92 வயது மூதாட்டி. மதுவா கிராமத்தில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக ரயிலில் ஏறிய மூதாட்டி நள்ளிரவில் ஷாடோலுக்கு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து மதுவா கிராமத்திற்கு போவதற்காக பேருந்துக்காக காத்திருந்தார்.

92-year-old Woman Raped in Madhya Pradesh

இரவில் பேருந்துக்காக காத்திருந்த 92 வயது மூதாட்டிக்கு லிஃப்ட் கொடுப்பது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் 92 வயது மூதாட்டி. மதுவா கிராமத்தில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக ரயிலில் ஏறிய மூதாட்டி நள்ளிரவில் ஷாடோலுக்கு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து மதுவா கிராமத்திற்கு போவதற்காக பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் மதுவா கிராமத்திற்கு அழைத்துச் செல்வதாக மூதாட்டியிடம் கூறியுள்ளார். இதை நம்பி மூதாட்டியும் இருசக்கர வாகனத்தில் ஏறியுள்ளார். ஊர் எல்லையைத் தாண்டியதும் அந்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக புதருக்குள் இழுத்துச் சென்று அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து மதுவா கிராமத்திற்கு வந்த மூதாட்டி, தனக்கு நேர்ந்த கொடுமையைக் அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து மதுவா போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரைத் தேடி வருகின்றனர். 92 மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios