எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை 70 வயது முதியவர் கிணற்றடிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் அவருக்கும் அவருக்கு துணையாக இருந்த 40 வயது மதிக்கத்தக்க நபருக்கும் போக்சோ சட்டத்தின் கீழ்  நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.  

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு  தியோலி மஞ்சி என்ற கிராமத்தைச்  சேர்ந்தவர் பாபுலால் மாலிக் என்ற ( 70 ) வயது முதியவரும் அவரது கூட்டாளியுமான   மோஹித் மாலிக் என்ற (40) வயது நபரும் இணைந்து   அதே பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு சிறுமியை சம்பவத்தன்று பின்தொடர்ந்து சென்றனர்.  அந்த சிறுமியை வழிமறித்து இருவரும் அவளிடம்  வெள்ளரிக்காயை கொடுப்பதாக கூறியுள்ளனர் .  அதை நம்பி அவர்களுடன் சென்ற அந்த சிறுமியை அவர்களிருவரும் கிணற்றடிக்கு அழைத்து சென்று அங்கு வைத்து  சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் .  இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று அவர்கள் சிறுமியை மிரட்டி அனுப்பிவிட்டனர். 

  

பின்னர் தனக்கு நேர்ந்தவைகள்  குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க,  அவர்கள்  காவல் நிலையத்தில் புகார்  கொடுத்தனர் அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,  70 வயது முதியவர் பாபுலால் மாலிக் மற்றும் அவரது நண்பர்  மோஹித் மாளிகை ஆகியோரை  கைது செய்தனர் இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதி மன்றத்தில்  நடைபெற்று வந்த நிலையில்,  சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 35 ஆயிரம் அபராதம் விதித்து  ராஜஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  இந்த தீர்ப்பு போக்சோ சட்டத்தின ஆளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.