Asianet News TamilAsianet News Tamil

பண்ணை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூரமாக அடித்து கொலை - அதிர்ச்சியில் உறவினர்கள்

கோவை மாவட்டம் கணியூர் பகுதியில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

70 years old lady killed by unknown persons in coimbatore vel
Author
First Published Sep 1, 2023, 10:23 AM IST

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே கணியூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதியப்பன். இவரது மனைவி பாப்பா (வயது 70). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணபதியப்பன், பாப்பா மற்றும் மகள் கணியூர் சுங்கச்சாவடி அருகே ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்தனர். மேலும் இவர்கள் தங்களது சொந்த ஊரில் வீடு கட்டி வருகிறார்கள். 

கணபதியப்பன், அவரது மகள் வீடு கட்டுமான பணியை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது வீட்டில் மூதாட்டி பாப்பா மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கணபதியப்பன், அவரது மகள் தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டில் தலையில் தாக்கப்பட்ட நிலையில் பாப்பா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்து அவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

காவிவிரியில் தண்ணீர் திறக்க முதலில் எதிர்ப்பு தெரிவித்தது எடியூரப்பாவும், பொம்மையும் தான் - அழகிரி குற்றச்சாட்டு

பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினரின் உதவியுடன் இதுகுறித்து உடனடியாக கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை தொடர்பாக தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். 

கிறிஸ்தவ கல்லூரிக்குள் சென்று விநாயகர் சதுர்த்திக்கு டொனேசன் கேட்டு வாக்குவாதம்

அப்போது வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து அடுத்து கொன்றது தெரியவந்தது. ஆனால் மூதாட்டி பாப்பா அணிந்து இருந்த நகைகள் எதுவும் கொள்ளை போகவில்லை. இதனால் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது யார்? எதற்காக பாப்பாவை கொலை செய்தார்கள்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பிணமாக கடந்த மூதாட்டியின் உடலை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios