சென்னை மெரினா கடற்கரையில் 7 வயது சிறுவன் ராட்டினத்தின் கம்பி தலையில் பட்டதில், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்களே..  இது ஒரு எச்சரிக்கை என்றே எடுத்து கொள்ளுங்கள்... "தற்போது பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால், அவர்கள் நம் கண் முன்னே தானே விளையாடி கொண்டிருக்கிறார்கள் என கொஞ்சம் நீங்கள் அஜாக்கிரதையாக இருந்தால் கூட கண் இமைக்கும் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம் என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு உதாரணம். 

சென்னை மெரினா கடற்கரையில், பானிபூரி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தவர் பத்மநாதன்.  தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தன்னுடைய மகன் 7 வயது மகன் பிரணவை, கடற்கரைக்கு  அழைத்து சென்றார்.  

சிறுவன் பிரணவ், கடற்கரை மண்ணில் விளையாடி கொண்டிருந்தான்.  மேலும் தந்தையின் கடை அருகே   வைக்கப்பட்டிருந்த ராட்டினத்தில் மற்ற குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்து உள்ளார்.  மகன் வேடிக்கை தானே பார்க்கிறான் என பானிபூரி தொழிலாளி பத்மநாதன் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் சுழன்று கொண்டிருந்த ராட்டினத்தின் கம்பி சிறுவனின் தலையில் பலமாக அடித்தது,  இதில் பிரணவ் கீழே விழுந்து, வலியால்  துடிதுடித்து பின் மயக்கம் அடைந்தார்.

 

பக்கத்தில் இருந்தவர்கள் உதவியோடு,  பத்மநாதன் உடனடியாக மகனை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.  சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், தலையில் பலமாக அடிப்பட்டதில் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இதை தொடர்ந்து ராட்டின தொழிலாளி பிரகாஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மெரினா கடற்கரையில் ஆசையாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.