உறவினர்கள் 20 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டு 7 சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பிரம்மதேசத்தை சேர்ந்தவர் ராணி(33). இவருக்கு 10 மற்றும் 7 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இரண்டு மகள்களும் சொந்த கிராமத்திலேயே படித்து வந்தனர். இதனிடையே ராணி வேலைக்கு சென்றபோது அங்கு உடன் பணியாற்றிய இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

பின்னர் ராணி தனது இரண்டு மகள்களையும் தாய் வீட்டிலேயே விட்டுவிட்டு, தனது இரண்டாவது கணவனுடன் சென்னை சாலிகிராமம் விஜயராகவபுரம் 4-வது தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், பாட்டி வீட்டில் வசித்து வந்த ராணியின் இரண்டு மகள்களையும், உறவினர்கள் சிலர் மிரட்டி கடந்த ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து வெளியில் சொன்னால் இருவரையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதால் பயந்து போய் யாரிடம் சிறுமி இதுதொடர்பாக கூறவில்லை. 

இதையும் படிங்க;- 6 மாதங்களாக முதலிரவு நடக்காமல் ஏங்கிய மனைவி... தந்தையுடன் உறவு வைத்துக்கொள்ள சொன்ன 'மாமா' கணவர்..!

இதற்கிடையே மகள்களை பார்க்க தாய் ராணி ஊருக்கு சென்ற போது நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளனர். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த ராணி, இரண்டு மகள்களையும் புதுச்சேரிக்கு அழைத்து சென்று அங்குள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். அங்கு, பள்ளி சென்ற மூத்த மகள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததை பார்த்த பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவியிடம் விசாரணை நடத்தினார். அப்போது, மாணவி நடந்த சம்பவங்களை கூறி அழுதுள்ளார். இது தொடர்பாக ஆசிரியை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ராணியின் இரண்டு மகள்களையும் 20-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, 16 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட இரண்டாவது மகளான 7 வயது சிறுமியை மட்டும் ராணி சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். தனது மகளை பலர் பாலியல் பலாத்காரம் செய்ததால் தான், உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு  உயிரிழந்தாள் என்று, சிறுமியின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.