கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) . இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார் .

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி அடிக்கடி வயிறு வலிப்பதாக தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார் . முதலில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அந்த சிறுமியின் பெற்றோர் , தொடர்ந்து வயிறு வலிப்பதாக கூறியதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் .

அங்கு தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது . சிறுமியை  மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது தான் , அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது . அதை அவளின் பெற்றோரிடம் மருத்துவர்கள் கூறிய போது அவர்கள் செய்வதறியாது திகைத்தனர் . 

பின்னர் அந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்து இருக்கின்றனர் . அப்போது தான் தனது பள்ளி ஆசிரியர் ஒருவர் தனக்கு பல மாதங்களாக பாலியல் தொல்லை அளித்து வந்ததை சிறுமி கூறி இருக்கிறாள் .

இதுகுறித்து மலப்புரம் காவல்துறையில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர் . புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியரை விசாரிக்க காவல் துறை சென்றிருக்கிறது . ஆனால் அந்த ஆசிரியர் தலைமறைவு ஆகியிருக்கிறார் . இதனால் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக காவல்துறையினர்  தேடி வருகின்றனர் .

படிக்க அனுப்பிய இடத்தில மாணவியை ஆசிரியர் ஒருவர் கர்ப்பமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .