சென்னை திருமுல்லைவாயலில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறுமியின் பெரியப்பாவான மீனாட்சி சுந்தரம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருமுல்லைவாயலில் நேற்று மாலை 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை கொலை செய்து உள்ளான் சிறுமியின் பெரியப்பாவான மீனாட்சிசுந்தரம். இவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 60 வயதான மீனாட்சி சுந்தரத்திற்கு இப்படி ஒரு கொடூர எண்ணம் தோன்றியுள்ளது. சிறு குழந்தையென என்று கூட பார்க்காமல் பாலியல் காமக்கொடூரனான மீனாட்சிசுந்தரம், 4 வயதே ஆன குழந்தையை பாலியல் கொலை செய்து சடலத்தை ஒரு கோணிப்பையில் அடைத்து வைத்து வீட்டில் உள்ள குளியலறையில் மறைத்து வைத்துள்ளான்.

பின்னர், பெற்றோர்கள் குழந்தையை நேற்று மாலை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் தன் வீட்டு குளியல் அறையிலேயே சடலமாக ஒரு பையில் இருந்ததை பார்த்து பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு அழுதனர். பின்னர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் குழந்தையின் பெரியப்பாவான மீனாட்சிசுந்தரத்தினை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டதை ஒப்புக்கொண்டு உள்ளான். பின்னர் ஆவடி அம்பத்தூர் சாலையில் சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக குற்றவாளியான மீனாட்சிசுந்தரத்தினை  தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கூறி போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். மீனாட்சி சுந்தரத்தை உடனடியாக தூக்கில் தொங்கவிட வேண்டும் அல்லது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பொதுமக்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.