22 வயது இளைஞருடன் ஏழு பிள்ளைகளுக்கு தாயான 60 வயது பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள காதல் விவகாரம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தம் காதலில் தான் உறுதியாக இருப்பதாகவும் அந்த இளைஞரைத்தான்  திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அந்த அறுபது வயதுப் பெண்மணி தெரிவித்திருப்பது போலீசார் செய்வதறியாது திகைக்க வைத்துள்ளது.   உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் இருக்கும் பிரகாஷ் நகர் எட்மாடுடாவுலா காவல் நிலையத்தில் காதல் புகார் ஒன்று வந்தது . 

 

அந்தப் பெண்ணின் கணவரும் அவரது  மகன்களும் காவல்நிலையத்தில் அந்த புகாரை கொடுத்திருந்தனர் ,  அதில் 60 வயது கடந்த என் மனைவிக்கும் எனக்கும் ஏழு பிள்ளைகள் உள்ளனர்,   அவர்களுக்கு திருமணமாகி எங்களுக்கு பேரப்பிள்ளைகளும் இருந்து வருகின்றனர் . இந்நிலையில் எனது மனைவி 22 வயது இளைஞர் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதாகவும் கூறிவருகிறார் .  முதலில் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என் மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என அந்த புகாரில்  அவர்  தெரிவித்துள்ளார்,  எனவே புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த பெண்மணியும்  அந்த இளைஞரையும் அழைத்து விசாரித்தனர் , அதில்  தன் கணவர் அந்த புகாரில் தெரிவித்தது உண்மைதான்,   அந்த இளைஞருடன் தனக்கு காதல் இருந்து வருவது உண்மைதான் என  அந்தப் பெண் தெரிவித்தார்.

அத்துடன் அந்த இளைஞருடான காதலில் உறுதியாக இருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் இருவரும் போலீசாரிடம் திட்டவட்டமாக தெரிவித்தனர் ,  இதைகேட்ட போலீசாருக்கு ஒரு கணம்  தலையே சுற்றிவிட்டது ,  சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட போலீசார் ,  அந்த இளைஞருக்கும் அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறினார் .  ஆனால் அவர்கள் அது ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை ,  ஒரு கட்டத்தில் போலீசார் அவர்களை மிரட்டியும் பார்த்தனர் ஆனால் அவர்கள் இருவரும் உறுதியாக இருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் மிகுந்த குழப்பம் அடைந்துள்ளனர் .  இந்நிலையில் அந்த இளைஞர் மீது  பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர் .