60 கல்லூரி மாணவிகள்..! 250 ஆபாச படங்கள்..! கோவை பொள்ளாச்சியில் பயங்கரம்..! 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 60 கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து அவர்களை மிரட்டி பணம் நகை கொள்ளையடிக்கப்பட்ட பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு,முகநூல் மூலமாக திருநாவுக்கரசு என்ற நபர் முகநூல் அழைப்பு கொடுத்து உள்ளார். இவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மாறி உள்ளது. தன்னுடைய அழகழகான புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு பல பெண்களுக்கு வலை வீசி உள்ளார் திருநாவுக்கரசு.

அப்படி போடப்பட்ட வலையில் சிக்கியவர் தான் இந்த கல்லூரி மாணவி. இவரும் திருநாவுக்கரசும் விடிய விடிய சாட் செய்து ஒரு கட்டடத்தில் இருவரும் தங்களது பரஸ்பர மொபைல் எண்களை பரிமாறி உள்ளனர். பின்னர் காதல் வரைக்கும் சென்ற இவர்களது நட்பு, ஒரு கட்டத்தில் நேரில் சந்திக்க திட்டமிட்டு உள்ளனர்

அதற்காக,அந்த மாணவியிடம் திருநாவுக்கரசு "நான் சொகுசு காரை கொண்டு வருகிறேன் ..இந்த காரில் சென்றால் யாரும் பார்க்க முடியாது. அதனால் நீ பயப்படாம வா என கூறி தைரியம் கொடுத்து ஆசை வார்த்தை கூறி உள்ளார்.இதனை நம்பி வெளியில் வந்த அந்த மாணவி, திருநாவுக்கரசு சொன்ன அந்த காரில் ஏறி உள்ளார் காரின் பின்புறமாக காதலன் திருநாவுக்கரசு அருகில் அமர, முன் சீட்டில் இருவர் இருக்கையில் அமர்ந்து உள்ளனர்.

பின்னர் கார் மெல்ல செல்ல தொடங்கியவுடன் ஒரு கட்டத்தில், மாணவியிடம் சில்மிஷம் செய்ய தொடங்கி உள்ளான் திருநாவுக்கரசு. இதனை முன் சீட்டில் அமர்ந்து இருந்த ஒருவர் வீடியோ எடுக்க  நிலைமையை புரிந்துகொண்ட மாணவி காரில் இருந்து சப்தம் போட்டு உள்ளார். ஆனால் சப்தம் போட்டால், வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என கூறி மிரட்டி உள்ளனர். பின்னர் அந்த மாணவியிடம் இருந்து தங்க செயினை மட்டும் பறித்துக்கொண்டு வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வர வேண்டும் என அந்த மாணவியை மிரட்டி நடு ரோட்டில் இறக்கி விட்டு சென்று உள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தன் தந்தையிடம் சொல்ல, அவர் பொள்ளாச்சி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். பின்னர் முகநூல் பக்கத்தில் உள்ள இவர்களின் விவரங்களை வைத்து, காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த தீய செயலை செய்து வந்த 3 நபர்களை போலீசார் பிடித்துள்ளனர்.முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தப்பித்து விட, அவர்  கூட்டாளியான சதீஷ்,சபரீசன்,வசந்த குமார் ஆகோயோரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட, 3 ஸ்மார்ட் போனில் 60 கும் மேற்பட்ட பெண்களின் 250 ஆபாச வீடியோக்களை வைத்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது 

இது குறித்து காவல் துறையினர் தெரிவிக்கும் போது, "இந்த விஷயம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதற்காக பெரிய கும்பலே செயல்பட்டு வருவதாகவும், மேலும் பல பெண்கள் இந்த விஷயத்தில் மாட்டிக்கொண்டு மாதம் மாதம் இந்த கும்பலுக்கு பணம் நகை கொடுத்து வருவதாகவும், இது குறித்து உரிய தகவல் அளிக்கும் பட்சத்தில் எஞ்சி இருக்கும் பல குற்றவாளிகளை கண்டுபிடிக்கலாம் என்கிறது காவல்துறை.. முன் பின் தெரியாமல் முகநூல் மூலமாக பழகும் பல பெண்களுக்கு இது மிக பெரிய பாடமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை . இனியாவது பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்  என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.