Asianet News TamilAsianet News Tamil

கோவை சிறுமி விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்...! துப்பு கொடுத்தால் சன்மானம்..!

கோவை சிறுமி கொல்லப்படுவதற்கு முன்பே பல நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

6 year old girl murdered.
Author
Tamil Nadu, First Published Mar 28, 2019, 4:32 PM IST

கோவை சிறுமி கொல்லப்படுவதற்கு முன்பே பல நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை திப்பனூரை சேர்ந்தவர் பிரதீப் (30). லாரி டிரைவர். இவரது மனைவி வனிதா (26). இவர்களது 6 வயது மகள் ரித்னாஸ்ரீ அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். 2 நாட்களுக்கு முன்னர் வீட்டின் முன் செல்போனில் விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். இது தொடர்பாக உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் பிரதீப் வீட்டின் எதிர்புறம் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள சந்தில் ஒன்றில் சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். 6 year old girl murdered.

இதனையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 year old girl murdered.
 
இதனிடையே இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக துப்புக் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நோட்டீஸ் அச்சடித்துள்ள காவல்துறை, அதை அந்த பகுதியில் ஒட்டி வருகின்றனர். தகவல் தெரிவிப்பவர்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 year old girl murdered.

இந்நிலையில் சிறுமி காணாமல் போனதற்கு முன்பாகவே பல நாட்களாக சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios