தலையில் கல்லைப்போட்டு கொல்லப்பட்ட திருநங்கை அபிராமியின் கொலை சம்பவத்தில் 10 நாட்கள் கழித்து 3 திருநங்கைகள் உட்பட 6 கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். 

விருத்தாசலம் கீரப்பாளையம் பகுதியை பகுதியை சேர்ந்த அன்பு என்ற திருநங்கை அபிராமி  விழுப்புரம் அருகே உள்ள திருநங்கைகள் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 16 ஆம் தேதி  வழக்கம் போல் அபிராமி தன்னை அலங்கரித்துக் கொண்டு விழுப்புரத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் - செஞ்சி கூட்டுரோடு அருகே ரத்த காயங்களுடன் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.  இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற அந்த கிராம மக்கள் திருநங்கை ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம்  போலீசார் இது சம்பந்தமாக விசாரணையை கையில் எடுத்தனர். கொலை செய்யப்பட்ட திருநங்கையின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக தாலுக்கா போலீசார், வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்யப்பட்ட திருநங்கையுடன் தங்கியிருந்த 10 திருநங்கைகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது பணம் பிரச்சனை காரணமாகவே இக்கொலை சம்பவம் நடந்திருக்கக்கூடும் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் போலீசார் உண்மை குற்றவாளியையும், கொலைக்கான காரணத்தையும் கண்டறியும் முயற்சியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் புதிய திருப்பமாக சம்பவத்தன்று அபிராமியுடன் சென்ற புனிதா என்ற திருநங்கையை சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது தான் இந்த கொலை பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

புனிதாவின் சகோதர் ராணுவத்தில் வேலை பார்க்கிறாராம். அவர் அபிராமியை கல்யாணம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அபிராமிக்காக விருத்தாசலத்தில் ஒருவீடு கூட கட்டி கொடுத்துள்ளாராம். தன் அண்ணனை கைக்குள் போட்டு கல்யாணம் செய்து கொண்டு, வீட்டையும் தன் பெயரில் எழுதி வாங்கி கொண்ட அபிராமியை பழிவாங்க முடிவு செய்திருந்தார் புனிதா. 

அதேபோல் பல்வேறு விஷயங்களில் கயல்விழி என்ற திருநங்கைக்கும் அபிராமியுடன் முன்விரோதம் இருந்துள்ளது. அதனால் தான் 2 பேரும் சேர்ந்து அபிராமியை கொலை செய்ய பிளான் போட்டுள்ளனர். அதன்படி தங்களது ஆண் நண்பர்கள் 3 பேர், 2 திருநங்கைகளையும் இதில் கூட்டு சேர்த்து கொண்டு அபிராமியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அபிராமியை கொன்ற 6 பேரை கைது செய்த போலீசார் , மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.