சூரிய கிரகணத்தன்று இளம்பெண்ணை பலி கொடுத்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் பீகாரைச் சேர்ந்த 5 பேர் இளம் பெண்ணை கடத்தியுள்ள  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அதிக மூடநம்பிக்கை மண்டிக்கிடக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்றே சொல்லலாம்,  ஆடு , மாடுகளை  பலி கொடுப்பதையும் தாண்டி சில நேரங்களில் அதீத நம்பிக்கையில் மனிதனையே பலிகொடுக்க துணியும் அளவிற்கு மூட நம்பிக்கை கொண்டவர்களாக  இந்தியர்கள் உள்ளனர்,  இதுபோன்ற அதிர்ச்சி சம்பவங்கள்  அடிக்கடி அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 

இந்நிலையில்  இளம் பெண் ஒருவரை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை காட்டி அந்தப் பெண்ணை கடத்தியுள்ள சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது நேபாளத்தைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒரவருக்கு  சினிமாவில் நடிக்க மிகுந்த ஆசை,  அவர் நேபாளத்தில் இருந்ததால்  வாய்ப்புகள்  அவருக்கு கிடைக்கவில்லை இந்நிலையில்  பீகாரைச் சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு  திரைப்படத்துறையில் பலரைத் தெரியும்,  நான் பல கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறேன்,  நீ அழகாக இருக்கிறாய் விரும்பினால் என்னுடன் வரலாம்,  உன்னை சினிமாவில் சேர்த்து பெரிய நடிகையாக்கி காட்டுகிறேன் என  அந்தப் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.  இதனை நம்பி அந்த நேபாளத்து பெண் அந்தபெண்மணியுடன் வர சம்மதித்துள்ளார். நேபாளத்திலிருந்து சாலை மார்க்கமாக அவர்கள்  இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்த நிலையில் ,  அவர்களது  வாகனத்தில்  திடீரென 6 பேர் ஏறியுள்ளனர் அவர்களை கண்டு அந்தப்பெண்ணுக்கு  அச்சமடைந்தார்.  

 

இந்நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த பெண்ணை இந்தியாவுக்கு கடத்த திட்டமிட்டிருப்பதாக நேபாள போலீசாருக்கு தகவல் கிடைத்தது  இதனையடுத்து  நேபாள செக்போஸ்டில் நேபாள போலீசார் அந்த காரை மடக்கினர் பின்னர்  காரில் இருந்தவர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில்   பீகாரை சேர்ந்த பெண்மணி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.  பின்னர்  சூரிய கிரகணத்தின் போது பலிகொடுக்க இந்தப் பெண்ணை கடத்தி வந்ததாக அப்போது அவர்கள் ஒப்புக்கொண்டனர் இந்நிலையில் இதுபோன்ற நரபலி பூஜைகள் ஏற்கனவே இவர்கள் நடத்தியுள்ளனரா.?  என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.