Asianet News TamilAsianet News Tamil

கைதானார் சவுக்கு சங்கர்... 6 மாதம் சிறை... நீதிமன்ற அவதூறு வழக்கில் கோர்ட் அதிரடி!!

ஒட்டுமொத்த நிதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என சங்கு சங்கர் பேசி இருந்த நிலையில் அவருக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. 

6 Month jail for Savukku Shankar ... Court takes action in court defamation case.
Author
First Published Sep 15, 2022, 5:34 PM IST

நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒட்டுமொத்த நீதித் துறையிலும் ஊழல் மண்டிக் கிடக்கிறது என கடந்த ஜூலை 22-ஆம் தேதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சவுக்கு சங்கர் பேட்டி கொடுத்தார் இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது, சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராகி சவுக்கு சங்கர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது, இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன், புகழேந்தி அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது,

அப்போது தன் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்காக கூறப்படும் வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவைகளை தன்னிடம் வழங்கவேண்டுமென சவுக்கு சங்கர் கோரினார். மேலும் அதற்கு பதிலளிக்க 6 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டார்.

6 Month jail for Savukku Shankar ... Court takes action in court defamation case.

இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு வீடியோ பதிவு நகல்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஒருவார காலத்திற்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து இன்று இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது, அப்போது சவுக்கு சங்கர் ஆஜரானார், அப்போது அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக தனது சார்பில் ஆஜராக நீதிமன்றம் யாரையும் ஏன் அனுமதிக்கவில்லை என்றும், மொத்தத்தில் நீதிபதி சுவாமிநாதன் தன்னை ஒரு கடவுள் போல பாவித்து செயல்படுகிறார் என்றும், என்னை  கைது  செய்து சிறையில் தள்ள முடிவு செய்துவிட்டார் என்றும் கூறியிருந்தார்.

எனவேதான் இன்று அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் போலீசார் சாவுக்கு சங்கரை சுற்றிவளைத்தனர்,ஆவர் கைது செய்யப்பட போகிறார் என பரபரப்பு தகவல் வெளியானது. பின்னர் சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று அங்கு நடந்தது என்ன என்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதன் விவரம் பின்வருமாறு

6 Month jail for Savukku Shankar ... Court takes action in court defamation case.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடந்தது என்ன ?

இன்று காலை விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. சரியாக இதற்கு முதல் நாள் 14.09.2022 அன்று, நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் தலைமையிலான அமர்வு, 1 மற்றும் 8 செப்டம்பர் அன்று நடந்த வழக்கு விசாரணைக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தது. 1 மற்றும் 8 செப்டம்பர் 2022 அன்று வரை, இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மட்டுமே எதிர் மனுதாரர். ஆனால், 14 செப்டம்பர் 2022 அன்று பிறப்பித்துள்ள உத்தரவில் சமூக வலைத்தளங்களான கூகிள், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இது வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள எனக்கு தகவல் தெரிவிக்காமலேயே இது நடந்துள்ளது. மேலும்,. இன்று முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் சோமயாஜி வாதாடினார். அவர் நீதிமன்றத்தின் நண்பராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காணொலி மூலமாக ஆஜரான சோமயாஜி, வழக்கில் வாதாட முழுமையான தயாரிப்போடு ஆஜராகியிருந்தார்.  இது இரண்டாவது பிழை. 

நீதிமன்றம் Amicus Curiae நியமிக்கையில், இரு தரப்பையும் கேட்டே நியமனம் செய்ய வேண்டும். அவர் வாதாடுகையில், சவுக்கு சங்கர் பேசியதும், எழுதியதும், நிச்சயம் நீதிமன்ற அவமதிப்பே, அவரை தண்டிக்க வேண்டும் என்று கேட்டும் கொண்டார். நீதிபதி ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.  வழக்கு முடிந்ததும், CISFமற்றும் தமிழக காவல் துறையினர் என்னை சூழ்ந்தனர்.  நீதிமன்றத்தை விட்டு வெளியே செல்லாத வகையில் பார்த்துக் கொண்டனர்.  ஒருவரின் movementஐ தடுத்தாலே அது கைது என்று உச்சநீதிமன்றம் DK Basu வழக்கில் சொல்லியுள்ளது. 
 

நான் குற்றவாளி என்று அறிவிக்காதபோதே, ஏன் தடுக்கப்பட்டேன் என என்னிடம் இருந்த tabல் tweet செய்தேன்.  இதையடுத்து, நீதிமன்ற பதிவாளர் வந்து, “ஏன் அப்படி போட்டீங்க.  நீங்க வெளிய போகணும்னா போலாம்” என்றார். இதையடுத்து, என்னை சுற்றி நின்ற காவல் துறையினர் தள்ளி நின்று கொண்டிருக்கிறார்கள்.  மொபைல்,Tab பயன்படுத்த தடையில்லை. தீர்ப்பு சில நிமிடங்களில் வர உள்ளது.  என பதிவிட்டிருந்தார். இந்நிலையில்தான் சவுக்கு சங்கருக்கு நாதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதகாலம் சிறை தண்டனை வழங்கி மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டது. இதை அடுத்து சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios