Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி ஊடுருவியது எப்படி... பரபரப்பு தகவல்..!

கோவையில் பதுங்கி இருந்த லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவ கேரளாவை சேர்ந்தவர்கள் உதவியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

6 lashkar-e-taiba in coimbatore
Author
Tamil Nadu, First Published Aug 23, 2019, 12:40 PM IST

கோவையில் பதுங்கி இருந்த லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவ கேரளாவை சேர்ந்தவர்கள் உதவியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 6 lashkar-e-taiba in coimbatore

தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும், விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையில் 6 பேரில் 5 இலங்கையை சேர்ந்தவர் என்றும், ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது. மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து தமிழகம் முழுவதும் போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்

.6 lashkar-e-taiba in coimbatore

கோவையில் மட்டும் 200 போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பேருந்து நிலையில், இரயில் நிலையத்தில் பயணிகளை முழு பரிசோதனை செய்தனர். நகரில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வந்தனர். இதையடுத்து கோவை போலீஸார் பயங்கரவாதிகள் என சந்தேகித்து 3 பேரின் புகைப்படத்தையும், வாகனங்களின் எண்களையும் வெளியிட்டனர். தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்ததில் கேரளாவைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் இந்த ஊடுருவல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios