58 வயது மாஜி தலைவரின் அடங்காத மஜா வெறி... கணவனை இழந்த பெண்ணை படுக்கைக்கு அழைத்த கொடுமை...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 58 வயதான மாஜி தலைவரின் ஆசைக்கு இணங்க டார்ச்சர்.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பேச்சிபாறை அடுத்த ஆலம்பரை வசித்து வருபவர் சீதா, இவர் அங்கன்வாடி பணியாளராக இருக்கிறார். கணவரை இழந்த நிலையில் இவர் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் பேச்சிப்பாறை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜன் என்பவர் தொடர்ந்து படுக்கைக்கு அழைத்து டார்ச்சர் கொடுத்து வருவதாலும், ஆசைக்கு இணங்க வற்புறுத்தி தினமும் வீட்டிற்கே வந்து மிரட்டுவாராம்.
சீதா இதுபற்றி பல முறை புகார் கொடுத்த பின்னரும் அது தொடர்பாக போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மனமுடைந்த அவர் மனு நீதி நாளான இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். பின்னர் தன கையில் கொண்டு வந்த பையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மணெண்ணெய் உடலில் ஊற்றிய பெண் தீக்குளிக்க முயன்றார். அதனை கண்ட பொது மக்கள் அவரை தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைகாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர். பாலியல் துன்புறுத்துதலுக்கு பயந்து பெண் ஒருவர் வாழ முடியாமல் தீ குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுதியுள்ளது.