விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே இருக்கிறது ரெங்கபாளையம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி (வயது 68), கணேசன் (40), ரணவீரன் (65), ராதாகிருஷ்ணன் (50), மற்றும் திருவன் (52). இவர்களில் கணேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய அணி ஒன்றிய செயலாளராக இருக்கிறார். 5 பேரும் சேர்ந்து அந்தப்பகுதியில் இருக்கும் சிறுவன் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக குற்றசாட்டு எழுந்திருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் மற்றும் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்திருக்கின்றனர். கடந்த 2 மாதமாகவே இது தொடர்கதையாக நடந்து வந்திருக்கிறது. அவர்கள் 5 பேரின் மிரட்டலுக்கு பயந்து சிறுவர் சிறுமிகள் வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர். எல்லைமீறி போகவே தற்போது சிறுவர் சிறுமிகள் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஊர் தலைவர்களிடம் 5 பேரின் பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக ஊர் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் தகராறு ஏற்பட்டு கைகலப்பு உருவாகவே அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட 5 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பேர் மீதும் போக்சோவில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

போலி பட்டியலின சான்றிதழில் அரசு அதிகாரியான மனைவி..! போட்டுக்கொடுத்து வேலைக்கு ஆப்பு வைத்த கணவர்..!