பள்ளி மாணவியை கற்பழித்து அதை வீடியோ எடுத்து வாட்ஸ்அப் மூலம் வீடியோவை பகிர்ந்து மாணவியை மாறி மாறி கற்பழித்து சீரழித்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரைப் பகுதியில் 9-ம் வகுப்பு படித்துவரும் 16 வயது பள்ளி மாணவிக்கு ஆலம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சிவசாமி என்பவரின் மகன் விஷ்வா என்பவருடன் நட்பு ஏற்பட்டதாகக் சொல்லப்படுகிறது.

இந்த நட்பை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட விஷ்வா, மாணவியடம் பலவந்தமாக கற்பழித்துள்ளார்.  அந்த பெண்ணை பலவந்த படுத்தி உல்லாசம் அனுபவித்ததை அப்படியே தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்ட விஷ்வா, தொடர்ந்து அதைக் காட்டி மிரட்டி தொடர்ந்து உல்லாசம் அனுபவித்துள்ளார்.

மாணவியிடம், "நான் சொல்வதைக் கேட்கவில்லையென்றால் எல்லோருக்கும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிவிடுவேன்" என்று மிரட்டி தொடர்ந்து மாணவிக்குத் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இந்நிலையில் அவன் எடுத்த வீடியோவையும் தன் நண்பர்களுக்கு வாட்சப் மூலம் அனுப்பியுள்ளான்.

இதைப் பயன்படுத்திக்கொண்ட விஷ்வாவின் நண்பர்கள் மாணவியை மிரட்டி ஒவ்வொருவராக அந்த பெண்ணை பலவந்தமாக கற்பழித்துள்ளனர். ஒரு கட்டத்தில் மாணவியின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரியவர, மகளுக்கு நடந்த சம்பவங்களைக் கண்ணீருடன் பார்த்து கதறியுள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் மானாமதுரை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மானாமதுரை போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மாணவியை வீடியோவைக் காட்டி, பல முறை கற்பழித்து கொடுமை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து முக்கிய குற்றவாளிகளான விஷ்வா, அவரின் நண்பர்களான கவியசரன், ஆகாஷ், அருண் ஆகிய 4 இளைஞர்கள் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் மானாமதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.