மாங்கல்ய தோஷம் கழிப்பதாக கூறி, தனது மருமகள் முறை கொண்ட இளம் பெண்ணை 4 வருடங்களாக கற்பழித்த கொடூரம் டெல்லியில் நடந்துள்ளது. இளம் பெண்ணின் புகாரை அடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  டெல்லியைச் சேர்ந்தவர் இளம் பெண்ணின் தந்தை வழி மாமா ஒருவர், அவருக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறியுள்ளார். தோஷத்தை கழிக்க வேண்டும் என்று கூறி அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

தோஷத்தை கழிக்காவிட்டால், உனது தந்தை இறந்து விடுவார் என்று பொய் கூறியுள்ளார்.பயந்துபோன அந்த இளம் பெண்ணோ, தந்தை நன்றாக இருந்தால் சரி என்று நினைத்து, அவரது மாமாவின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து கொண்டுள்ளார். இளம் பெண்ணின் பயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த காமுகனோ, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த பெண்ணை சீரழித்து வந்துள்ளார்.

நான்கு வருடங்களாக அந்த இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்குப் பிறகும், அந்த பெண்ணை பாலியலுக்கு அழைத்துள்ளான் அந்த காமுகன். திருமணத்துக்குப் பிறகும், மாங்கல்ய தோஷம் கழிக்க வேண்டும் என்று கூறி அந்த பெண்ணை செக்சுக்கு அழைத்துள்ளான். 

திருமணத்துக்குப் பிறகும், மாங்கல்ய தோஷமா என்று சந்தேமடைந்த அந்த பெண், மாமனாரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாமனார், மருமகளுடன் சென்று சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாருக்கு பிறகு, அந்த காமுகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மாங்கல்ய தோஷம் என்று கூறி 23 வயது இளம் பெண்ணை, 4 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.