நட்பாக பேசி பிறந்தநாள் கேக் வெட்ட  பூங்காவிற்கு அழைத்துவந்து பின் அந்த  மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பதினோராம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர் . கோவை மாவட்டம் கீர நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அதே பகுதியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அவருடன் படிக்கும் மாணவர் மணிகண்டனுக்கு கவிதா மீது ஒருவிதமான ஈர்ப்பு இருந்து வந்துள்ளது . இதுகுறித்து தன்னுடைய நண்பர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். 

அவர்கள் கொடுத்த ஆலோசனையின்படி அந்த மாணவியை பிறந்தநாள் கேக் வெட்டுவதற்காக திட்டமிட்டு பூங்காவுக்கு வரவழைத்தனர்,  கடந்த 26ஆம் தேதி மாலை ஐஸ்வர்யா நகர் பூங்காவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.  அது முடிவதற்கு இரவு நேரமாகிவிட்டது, அங்கு இருள் சூழ்ந்ததால் , அப்பகுதி பொதுமக்கள்  நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது .  அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் மணிகண்டன் .  நண்பர்களின் உதவியுடன் அந்த மாணவியை பூங்காவின் புதருக்குள் தூக்கிச் சென்று மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்தார் . அந்த மாணவி எவ்வளவோ தடுத்து பார்த்தும்,  கூச்சலிட்டும் சக நண்பர்கள் யாரும் உதவிக்குவரவில்லை அவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததுடன்.   மணிகண்டனுக்கு சாதகமாகவே அவர்கள் நடந்து கொண்டனர்.

அத்துடன் அங்கு நடந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்ததாகவும் தெரிகிறது .  பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த மாணவியின் நண்பர்களான ராகுல் , பிரகாஷ், கார்த்திகேயன் ,  மற்றும் நாராயண மூர்த்தியை ,  போக்சோ சட்டத்திக் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் இதில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மற்றும் அவருடன் சேர்ந்து வீடியோ எடுத்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் .