தம்பியின் காதலியிடம் பேசிய நபர் அடித்து கொலை; திருச்சியில் சிறுவன் உள்பட 4 பேர் அதிரடி கைது
திருச்சி அருகே தம்பியின் காதலியிடம் பேசிய கொத்தனாரை அடித்து கொன்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது.
திருச்சி மாவட்டம், மணிகண்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்(வயது 43). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். மேலும் இவர் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் காதலித்து வந்த பெண்ணிடம் வீட்டில் அம்மா இருக்காங்களா என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்த சதீஷின் அண்ணன் ஜெகதீசன் மற்றும் அவரது நண்பர்கள் நாகராஜனிடம் எப்படி தன் தம்பியின் காதலியிடம் பேசலாம் என கூறி சாமியாபட்டி குளத்துகரை அருகே வைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் வாய் தவறாக ஏற்பட்டு ஆடித்தடியாக மாறியது. இதில் ஜெகதீசன் மற்றும் அவருடைய நண்பர்களான தீபக், சிலம்பரசன், மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து நாகராஜனை சரமரியாக தாக்கியுள்ளனர்.
திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை; காங். மட்டும் தான் பேசியுள்ளது - துரைமுருகன்
இதில் படுகாயம் அடைந்த நாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தகவல் அறிந்த மணிகண்டம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஜெகதீசன், தீபக், சிலம்பரசன், மற்றும் சிறுவன் உட்பட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மூன்று பேர் திருச்சி மத்திய சிறையிலும் சிறுவன் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.