Asianet News TamilAsianet News Tamil

விநாயகர் சிலை கரைக்கும் போது ஏற்பட்ட விபரீத சம்பவம் - பொதுமக்கள் அதிர்ச்சி

விநாயகர் சதுர்த்தியின்போது, விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைத்து வருவது வழக்கம்.

4 people lost their lives when Ganesha statue melts
Author
First Published Sep 10, 2022, 4:38 PM IST

இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கியமான பண்டிகையாகும். இந்து மத கடவுள் விநாயகர் பிறந்த தினமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

4 people lost their lives when Ganesha statue melts

மேலும் செய்திகளுக்கு..கோஹினூர் வைரம் இந்தியா திரும்ப வேண்டும்.. ட்விட்டரில் மன்னர் குடும்பத்தை விளாசும் நெட்டிசன்கள் !

விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகள், பொது இடங்களில் கடவுள் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோல், வீடுகள், பொது இடங்களில் வைக்கப்பட்ட கடவுள் விநாயகர் சிலைகளை ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தியின்போது, விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைத்து வருவது வழக்கம். இந்த நிலையில், அரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று இரவு விநாயகர் சிலையை அப்பகுதியில் உள்ள கால்வாயில் கரைக்கச் சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கினர். இதில் 4 இளைஞர்களை மீட்டனர்.

மேலும் செய்திகளுக்கு..வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கைவிட மறுத்த கணவன் - நடுராத்திரியில் மனைவி செய்த சம்பவம்!

4 people lost their lives when Ganesha statue melts

இந்த சம்பவம் குறித்து தெரிவித்த போலீசார், 'உயிரிழந்த 4 பேரும் மஹேந்தர்கரை சேர்ந்தவர்கள். ஜக்டோலி கால்வாயில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதைப்பொருட்படுத்தாமல் சிலையை கரைக்க அதில் இறங்கியுள்ளனர். மொத்தம் 8 பேர் நீரில் மூழ்கினர். அதில் 4 பேர் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..500 மில்லியன் டாலர் சொத்து.. பாஸ்போர்ட் இல்லாமலே வெளிநாடு போகலாம் - மன்னர் சார்லசுக்கு இவ்வளவு வசதிகளா ?

Follow Us:
Download App:
  • android
  • ios