சிவகாசியில் பள்ளி மாணவி ஒருவர்  மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,   பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார என்ற கோணத்தில்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெயிண்டர் சுந்தரம்  இவரது மகள் (கவிதா - 8) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் பக்கத்தில் உள்ள சித்துராஜபுரம் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த நிலையில் 20ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி பக்கத்தில் உள்ள காட்டுப்பகுதிக்குள் மலம் கழிக்கச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. 

 

நீண்ட நேரம் ஆகியும் கவிதாவை காணாத பெற்றோர்களும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் சிறுமியை காணவில்லை.  இந் நிலையில் 21ஆம் தேதி காலை காட்டுப் பகுதிக்குச் சென்ற கிராம மக்கள் அங்கு சிறுமி கவிதா சடலமாக கிடந்ததை  கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவம் காட்டுத்தீ போல் கிராமம் முழுவதும்  பரவி அப்பகுதி  கிராம மக்கள் அங்கு  திரண்டனர் .  தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் தலைமையிலான  போலீசார் வழக்கு பதிவு  செய்து  விசாரணையை மேற்கொண்டனர். சம்பவ இடத்தை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து நிலையில் போலீஸ் மோப்பநாய் கொண்டுவரப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

  

இதையும் படியுங்க : சீனாவை அடக்கி ஒடுக்கிவைத்த கொடுரன் கொரோனோ...!! மரண பயத்தில் நடுங்கும் சீனர்கள்... விழி பிதுங்கும் ஜி ஜின் பிங்...!!

சிறுமியின்  உடலை கைப்பற்றிய போலீசார்,   உடற்கூறு ஆய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா?  என்பன உள்ளிட்ட  பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இதுபோன்ற படு பாதகமான செயல்களுக்கு தமிழக அரசின் மதுபான கடைகளே காரணம்  என குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி  பெண்கள் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளியை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் எனவும்  நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டத்தில் குதிப்போம் எனவும் எச்சரித்தனர் .