கிழவி வேடத்தில் சபரிமலை சென்ற 36 வயது பெண் இவர் தான்..! வெள்ளை நிற டை அடித்து ஏமாற்றியது அம்பலம்...

https://static.asianetnews.com/images/authors/ea14f421-6212-5fd4-a5ec-f2773be89cf5.jpg
First Published 10, Jan 2019, 2:21 PM IST
38-year-old Congress worker SP Manju fakes her identity as an old woman to enter Sabarimala
Highlights

கேரளாவை சேர்ந்த 36 வயது பெண் கடந்த செவ்வாயன்று தான் சபரிமலையில் தரிசனம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து முகநூல் குழு ஒன்றில், சபரிமலை சென்றதற்கு ஆதாரமாக மஞ்சு தனது முகநூலில் வீடியோ மற்றும் புகைப்படங்கள்  வெளியிட்டுள்ளார்.

கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதனையடுத்து மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் மாதாந்திர பூஜைக்காக ஐயப்பன் கோவிலின் நடை ஐப்பசி மாதம் திறக்கப்பட்டது. முதல் முதலாக ரெஹானா பாத்திமா முதல் ஸ்வீட்டி மேரி வரை ஐயப்பன் கோவில் சன்னிதானம் செல்ல முயன்றார் ஆனால் பக்தர்களின்  கடும் எதிர்பால் வெளியேற்றப்பட்டார். மேலும் பல பகுதிகளில் தடியடி சம்பவமும், முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, பல்வேறு எதிர்ப்பையும் மீறிபிந்து - கனகதுர்கா ஆகியப் பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. இவர்களை அடுத்து, வயதான பெண் போன்று வேடமிட்டு 36 வயது பெண் 18 படி ஏறி சாமி தரிசனம் செய்துள்ளது. பக்தர்களின் எதிர்ப்பு வரும் என்ற காரணத்தால் ததைமுடிக்கு வெள்ளை நிற டை அடித்து 50 வயது பெண் போன்ற தோற்றத்துடன் சபரிமலைக்கு சென்றுள்ளார்.  முகநூலில் வெளியிட்ட வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது.

அந்த வீடியோவில் மஞ்சு, நான் கடந்த ஜன.8ஆம் தேதி சபரிமலைக்குள் சென்றேன். திரிசூரில் இருந்து பேருந்து மூலம் சென்ற நான், என்னை இளம் பெண்ணாக மற்றவர்களிடம் காட்டிக்கொள்ளவில்லை. இப்படி கோவிலுக்குள் சென்ற நான், 2 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இருந்தேன் என்கிறார்.  ஆனால், சபரிமலைக்குள் செல்வதற்கு மஞ்சு எந்த போலீசாரின் உதவியையும் கேட்கவில்லை. 

இளம்பெண் கோவிலுக்குள் செல்வதால் ஏற்படும் போராட்டங்களை தடுக்கவும், தன் மீதான தாக்குதலை தவிர்க்கவும் மஞ்சு தன்னை வயதானவராக காட்டிக்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் தலைமுடி நிறைத்தது போன்று தோற்றமளிக்க வெள்ளை கலர் டை அடித்துள்ளார்.  

loader