விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படும் நிலையில், அங்கு மின்சார வேலியில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன் என்பவர், இவருடைய நிலத்தை 3 வருடத்திற்கு முன்பு சடகோபன் என்பவர் குத்தகைக்கு பெற்று, அதில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் அந்த நிலத்தில் தற்போது வேர்கடலை போட்டிருக்கும் நிலையில், பன்றி தொல்லை காரணமாக நிலத்தை சுற்றி சட்டத்திற்கு புறம்பாக 2 அடி உயரத்தில் காப்பர் கம்பிகளை கொண்டு மின்வேலி அமைத்துள்ளார்.

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்.. மாடியிலிருந்து குதித்தது உண்மையா..? சிபிசிஜடி கையில் எடுத்த ஆயுதம்..

இந்நிலையில் நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த முருகதாஸ், வெங்கடேசன், சுப்பிரமணி ஆகிய மூன்று பேரும் முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சார வேலியில் சிக்கி, மூன்று பேரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளனர். உடனே அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க:விவசாய பகுதிக்குள் நுழைந்த கரடி...! கரடியோடு சண்டையிட்டு படுகாயங்களோடு உயிர் பிழைத்த பெண்கள்

இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என்று தெரிவித்தனர். மேலும் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.