சென்னை புது வண்ணாரப்பேட்டையில் கடந்த 17ஆம் தேதி இரவில் தியாகி பெருமாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ரவுடி ஜீவன் குமாரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக புது வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏழு பேரை கைது செய்துள்ளனர் ஒருவருக்கொருவர் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வெட்டி கொன்றதாக தகவல் தெரிவித்தனர். 

சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இறந்த ஜீவன் குருமார் பிரதீப் குமார் என்பவரை தாக்கிய குற்றத்திற்காக சிறை சென்று திரும்பி வந்த நிலையில் மதுபான கடையில் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள சிலரிடம் வீன் வம்புக்கு செல்வது தவறு செய்வது என்ற நிலையில் ஜீவன் குமார் இருந்ததாகக் கூறப்படுகிறது. நிலையில் சம்பவத்தன்று இரவு மதுபான கடைக்கு சென்றுவிட்டு தனியாக நடந்து வந்துகொண்டிருந்த ஜீவன் குமாரை நோட்டமிட்ட ஒரு கும்பல், சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அப்பகுதியில் இருந்து தப்பி சென்றனர். 

இது சம்பந்தமாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புது வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திக் என்ற குமார் ஹரிஷ் என்ற விக்கி அஜய் என்ற ஜானகிராமன் நஸ்ருள்ள மௌசம் திவ்ய சந்தோஷ் ஆகிய 7 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இன்று மேலும் 3 பேர் கொலை வழக்கில் மனோஜ், பிரகாஷ் , தமிழ் ஆகியோர் புதுவண்ணாரப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க : கிராமத்துக்குள் பேய்.! பேய்க்கு பயந்து 2 வாரம் லாக்டவுன் போட்ட பொதுமக்கள்.! எங்கு தெரியுமா ?