சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மொட்டை மாடியில் குப்புற பிணமாக கிடந்த வெளிநாட்டிலிருந்து திரும்பிய மணிமுத்து கிடக்க , வீட்டினுள் அவரது மனைவி பூமதி மற்றும் அவரது குழந்தைகள் பிரவீனா, கமலக்கண்ணன், சஞ்சய் அரவிந்த் இருப்பதும் தெரியவந்தது. கொலைக்கானக் காரணம், கொலையாளி யார்? என விசாரிக்க தொடங்கியதும் விடாமல் பெய்த  மழையால் தடையும் ஏதும் கிடைக்கவில்லை. ஆனாலும் கொலை நடந்த அடுத்த 6 மணி நேரத்தில் கொலை செய்த மந்திரவாதி கள்ளக்காதலனை தூக்கியது போலீஸ்.

கொலையான நபர் மொட்டை மாடியில் பயங்கர காயங்களுடன் இருக்க, அவரது மனைவி பூமதியின் அழுகையோ அவ்வளவாக ஃபீலிங் இல்லை என்பதால்,நம்ம போலீசின் கவனம் அவரது மனைவி பூமணி மீது திரும்பியது. கொலையான மணி முத்துவிற்கும் அவரது சகோதரி குடும்பத்திற்கும் சொத்துத் தகராறு உள்ளது. அவங்க தான் இந்த கொலையை செய்திருக்கனும் என அடிக்கடி கூறி வந்ததும் சந்தேகத்தை வலுவடைய செய்தது. இதனால் அவங்க சகோதரியையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரிக்கையில், ராமேஸ்வரம் மந்திரவாதி வேல்முருகன், கூட்டாளிகள் ராமநாதபுரம் பிரகாஷ் மற்றும் குமார் ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததாக உண்மையை ஒத்துக்கொள்ள கொலையாளிகளான மந்திரவாதி, பிரகாஷையும் கைது செய்து  விசாரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் கொலைக்குப் பயன்படுத்திய நிஸான் சன்னி காரும் (TN22-CU 8579) கைப்பற்றப்பட்டுள்ளன. தப்பியோடிய குமாரும் கிக்கினால் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களும்  கிடைக்கும் என தெரிகிறது.  

விசாரணையில், கொலை செய்யப்பட்ட  சாமியார் வேல்முருகன் 15 ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் அருகிலுள்ள கூட்டுக்கொல்லை கிராமத்திற்கு புதையல் எடுத்து தருவதற்காக வந்துள்ளான். அப்பொழுது அங்கு தான் மணிமுத்துவின் மனைவி பூமதிக்கும், சாமியாருக்கும் பழக்கம் உண்டானது. இந்த பழக்கம் வீட்டிற்க்கே வந்து உல்லாசவாழ்க்கை அனுபவிக்கும் அவ்விற்கு தகாத உறவாக மாறியுள்ளது.  பூமதியின் கணவர் மணிமுத்து வெளிநாட்டிலேயே வேலைக்காக செல்லவே குழந்தைகளின் கல்விக்காக காரைக்குடியில் வசிக்கவுள்ளேன் எனக் கூறி காரைக்குடியில் தனியாக வீடு எடுத்து வசித்ததும் இருவருக்கும் சாதகமானது. எப்பொழுதாவது ஊருக்கு திரும்பும் மணிமுத்துவிற்கு பூமதியின் கள்ள தொடர்பு தெரியவில்லை. 

இந்நிலையில், 5 வருஷத்திற்கு பிறகு கடந்த வாரத்தில் திரும்பிய மணிமுத்துவிற்கு மனைவிக்கும் மந்திரவாதிக்கும் தகதவுறவு இருப்பதை தெரிந்த கணவன் மனைவியைக் கண்டித்திருக்கின்றார். பூமதியோ தன்னுடைய காதலனான மந்திரவாதியிடம் சொல்லி, கணவனின் கை காலை உடைக்க சொல்லியிருக்கின்றார்.

ஆனால், இதுதான் சமயம் என அமாவாசை நாளில்  நடு ராத்திரியில் 1 மணிக்கு ராமநாதபுரம் அல்லிக்கண்மாயில் நிர்வாண பூஜையை நடத்திவிட்டு தன்னுடைய கூட்டாளிகளான பிணம் எரிக்கும் தொழிலாளியான பிரகாஷையும் அவனின் நண்பனான குமாரையும் தன்னுடைய காரிலேயே காரைக்குடிக்கு அழைத்து வந்து, அவர்களது துணையுடன் அதிகாலை 3 மணியளவில் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த மணிமுத்துவை குத்திக் கொலை செய்துள்ளனர்.