Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைனில் கஞ்சா விற்பனை… வசமாக சிக்கிய 3 கல்லூரி மாணவர்கள்… அடுத்து நிகழ்ந்தது என்ன?

ஆன்லைனில் கஞ்சா விற்பனை செய்த மூன்று கல்லூரி மாணவர்களை கைது செய்த காவல்துரையினர் அவர்களை சிறையில் அடைத்தனர். 

3 college student arrest for selling cannabis through online
Author
Pasumalai, First Published Jul 13, 2022, 7:13 PM IST

ஆன்லைனில் கஞ்சா விற்பனை செய்த மூன்று கல்லூரி மாணவர்களை கைது செய்த காவல்துரையினர் அவர்களை சிறையில் அடைத்தனர். மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த பசுமலையில் இரண்டு தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாகவும் கஞ்சா பொட்டலங்கள் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதாகவும் மாநகர காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தல்லாகுளம் காவல் ஆணையர் சுரேஷ்குமார், ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைத்து கண்காணித்தனர். இதில் மதுரை ஜம்புரோபுரம் மார்க்கெட் பகுதியில் உள்ள மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் வாயிலாக சக மாணவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்ததது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க: காதலியை பார்க்க சென்ற விஜய்.. அடித்து கொன்ற அஜித் - திண்டுக்கல்லை அதிர வைத்த சம்பவம்.!

3 college student arrest for selling cannabis through online

இதை அடுத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், இன்ஸ்டாகிராம் வழியாக லொக்கேஷன் வசதியை பயன்படுத்தி வெவ்வேறு இடங்களுக்கு வரவழைத்து சக மாணவர்களுக்கு கஞ்சாவை சிறிய பொட்டலங்களாக 50 ரூபாய், 100 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதை அடுத்து கஞ்சா விற்பனையில் தொடர்புடைய கிஷோர், மணிகண்டன், சந்தோஷ் குமார் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: பள்ளிக்கரணையில் இளம் பெண் கூட்டுப் பலாத்காரம்: கைம்பெண்களுக்கு குறி: கைதான பல் டாக்டரின் லீலை அம்பலம்

3 college student arrest for selling cannabis through online

மேலும் அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்கள், இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவரும் கல்லூரி இறுதியாண்டு, இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சக மாணவர்களுக்கு இன்ஸ்டா, ஃபேஸ்புக் மூலம் விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால் இவர்களின் போன் நம்பர் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. மேலும் அப்படி விற்பனை செய்தால் யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios