மகளையே கர்ப்பமாக்கி 2 வது அப்பா செய்த நாசம் அறந்தாங்கியில் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே களப்பக்காட்டில் வசிப்பவர் முத்துலட்சுமி. இவரது கணவர் சேகர். இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆன நிலையில் சேகர் உயிரிழந்து விட்டார். இதனால், குழந்தையுடன் தனது தந்தை வீட்டிற்கு சென்று முத்துலட்சுமி வாழ்ந்து வந்தார். 

இந்நிலையில் முத்துலட்சுமிக்கு லாரி டிரைவர் ரவிச்சந்திரன் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அதன் அதன்பிறகு முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை அப்பாவிடம் விட்டுவிட்டு இரண்டாவது கணவருடன் மீண்டும் அறந்தாங்கிக்கு குடிபெயர்ந்தார் முத்துலட்சுமி. இரண்டாவது கணவன் ரவி சந்திரன் மூலம் இரண்டு மகள்கள் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில், முதல் கணவருக்கு பிறந்த சிறுமியை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்க வைக்க அறந்தாங்கிக்கு அழைத்து வந்தார் முத்துலட்சுமி. சம்பவ நாளன்று முத்துலட்சுமியும், இரண்டாவது கணவருக்கு பிறந்த 3 குழந்தைகளும் வீட்டில் இல்லை. இந்த சந்தப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ரவி சந்திரன், சேகரின் மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் அந்த பெண் கர்ப்பமாகி உள்ளார். இந்த விவகாரம் தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த முத்துலெட்சுமி, அறந்தாங்கி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணைக்கு பின் ரவிச்சந்திரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.