Asianet News TamilAsianet News Tamil

200 லிட்டர் கள்ளச்சாராயம்...10 பேர் கைது...இது 144 ஊரடங்கு ஸ்பெசல் ஆக்சன்..!!

வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருட்டுத்தனமாக கள்ளச் சாராயம் விற்று வந்த 10 பேரை கைது செய்து,அவர்களிடமிருந்து போலீசார் 200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
 

200 liters of counterfeit liquor
Author
Tamilnádu, First Published Apr 8, 2020, 10:51 PM IST

T.Balamurukan

வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருட்டுத்தனமாக கள்ளச் சாராயம் விற்று வந்த 10 பேரை கைது செய்து,அவர்களிடமிருந்து போலீசார் 200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

200 liters of counterfeit liquor

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. வாணியம்பாடி அடுத்த தும்பேரி, உதயேந்திரம், நிம்மியம்பட்டு, நாராயணபுரம், தேவராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக சாராயம் விற்பனை நடைபெறுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு  தகவல் கிடைத்தது.

200 liters of counterfeit liquor

 அரசு உத்தரவு மீறி கள்ளச்சாராயம் காய்ச்சி திருட்டு தானமாக விற்பனை செய்துவந்த விநாயகம் ஐயப்பன், ரஞ்சித் குமார், சரவணன் கார்டில்ஸ் என்கிற கார்டுவன் மார்சஸ், ஜெயச்சந்திரன், சூர்யா, திருப்பதி உட்பட 10 பேரை கைது செய்தனர் . அவர்களிடம் இருந்த 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் 200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து வாணியம்பாடி மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் திருப்பத்தூர் மாவட்டத்தின் பல இடங்களில் திருட்டு தானமாக மது விற்பனை நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios