நாங்குநேரி அருகே நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் 2 பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி மாடன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (50). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சண்முகத்தாய்(45). இவர்களுக்கு 3 மகன்கள். இதில் 2-வது மகன் நம்பிராஜன் (21), பால்பண்ணையில் வேலை செய்து வந்தார். இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகள் வான்மதிக்கும் (18) நம்பிராஜனுக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் வான்மதியின் பெற்றோர், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எதிர்ப்பையும் மீறி 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் நம்பிராஜன், வான்மதியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த வான்மதியின் உறவினர்கள் மற்றும் அண்ணன் நம்பிராஜன் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்தனர்.  இந்த கொலை தொடர்பாக வான்மதியின் அண்ணன் செல்லசாமி (26), உறவினர்கள் செல்லத்துரை (24), முருகன் (25) மற்றும் முத்துப்பாண்டியன், விசுவநாதன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் வான்மதியின் உறவினர்கள் நாங்குநேரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது நம்பிராஜன் குடும்பத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதற்கு பழிவாங்கத்தான் நம்பிராஜனின் தயார் மற்றும் சகோதரியான சண்முகத்தாய், சாந்தி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டி தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். 12 பேர் கெண்டு கும்பல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவருரின் உடலை கைப்பற்றி பிரேத பரசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் பழிக்கு பழியாக இரட்டை கொலை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.