பெண் தோழியிடம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி தொடர்ந்து மிரட்டி ஒரு கட்டத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 4 நபர்களை திருச்சி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள கேகே நகர் பகுதியில் வசித்து வரும் முதலாம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் மாணவி, தன் வகுப்பில் உள்ள மற்றொரு மாணவியுடன் நன்கு பழகி வந்துள்ளார். இவர் மூலமாக அவருடைய நண்பர்கள் சரவணன் மற்றும் செந்தில் அறிமுகமாகி உள்ளனர். தொடக்கத்தில் நல்ல நண்பர்களாக சாதாரண முறையில் மெசேஜ் அனுப்புவது போன் காலில் பேசுவதுமாக இருந்துள்ளனர். பின்னர் ஒரு கட்டத்தில் ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது அசிங்கமாக பேசுவதுமாக இருந்துள்ளனர். 

இதனால் கோபமுற்ற அந்தப் பெண், சரவணன் மற்றும் பாலாஜியை கண்டித்துள்ளார். மேலும் அவர்கள் இருவரின் மொபைல் எண்ணையும் பிளாக் செய்து உள்ளார். இருந்த போதிலும் தன்னுடைய தோழியின் மூலமாக மிரட்டல் விடுத்து உள்ளனர். பின்னர் திருச்சி அருகே உள்ள ஒரு பூங்காவிற்கு 2000 ரூபாய் கொண்டு வர சொல்லி உள்ளனர். இந்த பெண்ணும் யாருக்கும் தெரியாமல் 2000 ரூபாய் எடுத்து சென்று உள்ளார். அங்கு வந்திருந்த சரவணன் மற்றும் பாலாஜி, இந்தப் பெண்ணிடம் இருந்து 2000 ரூபாயை பிடுங்கிக் கொண்டது மட்டுமல்லாமல் அவருடன் வந்திருந்த மேலும் இரண்டு நபருடன் சேர்ந்து கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளனர்.

அங்கிருந்து தப்பித்து ஓடி வந்து, நடந்த அனைத்து விஷயங்களையும் தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் இந்த பெண், பின்னர் இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து சரவணகுமார் மற்றும் செந்திலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த மற்ற நான்கு பேரையும் தேடி வருகின்றனர். படிக்கும் வயதில் எல்லை மீறி நடந்து கொண்ட இவர்களின் செயலை கண்டு பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.