பெங்களூரில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேரும், இதை மூடி மறைக்க முயற்சித்த 6 பேர் என 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேரும், இதை மூடி மறைக்க முயற்சித்த 6 பேர் என 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூரு வித்யாரண்யபுராவின் தொட்டபெட்டஹள்ளி அருகில் காவேரி லே - அவுட்டில் கிறிஸ்துவ தேவாலயம் உள்ளது. தேவாலயம் அருகில் வசித்து வந்த தம்பதி பணிக்கு செல்வதற்கு முன் தங்கள் 6 வயது மகளை, தேவாலயத்தில் சைமன் பீட்டர் என்பவரிடம் விட்டு செல்வர். பணி முடிந்து மகளை தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்வர். இதை தனக்கு சாதமாக்கி கொண்ட சைமன் பீட்டர் சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை காட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். 

சிறுமி 14 வயது ஆகும் வரை இந்த கொடுமையை சைமன் பீட்டர் தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி வந்துள்ளார். ஆகையால், இதுதொடர்பாக யாரிடமும் கூறவில்லை. இதனால், மனவேதனையில் இருந்த சிறுமி அதே தேவாலயத்தில் இருந்த சாமுவேல் டிசோசா என்பவரிடம் தெரிவித்தார். அவரும் இதை தனக்கு சாதகமாக்கி, அச்சிறுமியை மிரட்டி, 2 ஆண்டுகள் பலாத்காரம் செய்து வந்துள்ளார். நாளடைவில் இந்தத விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து சாமுவேல் டிசோசாவை எச்சரித்தனர்.

இதனால், மன அழுத்தத்தில் இருந்த சிறுமிக்கு ஆலோசனையும், சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பின், தற்போது பூரண குணமடைந்து 18 வயது நிரம்பிய அப்பெண், போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, பலாத்காரம் செய்த இருவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.