ஆட்டோ கண்ணாடியை உடைத்து வெறித்தனம்..! மது போதையில் ஆட்டம் போட்டதால் வெளுத்து  வாங்கிய போலீஸ்..!

போதையில் ஆட்டோ கண்ணாடியை உடைத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.புளியந்தோப்பு, ராமசாமி தெருவைச் சேர்ந்தவர், ஜான் பாட்ஷா (29), ஆட்டோ ஓட்டுனர். 

இவரது ஆட்டோவின் கண்ணாடியை கடந்த 13ம் தேதி மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியது தொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் புளியந்தோப்பு போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது புளியந்தோப்பு, பிஎஸ்.மூர்த்தி நகரை சேர்ந்த சிவா என்ற சொறி சிவா (23), என்பவரும், புளியந்தோப்பு, பார்டிசன்ப்ரோ லேன் பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் (28) என்பவரும் சேர்ந்து மதுபோதையில் ஆட்டோ கண்ணாடியை உடைத்தது விசாரணையில் தெரியவர அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.