13 வருடங்களாக சிறுமியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்த உறவினர்கள்; காவல் துறையினர் அதிரடி

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 22 வயது இளம் பெண்ணை 13 வருடங்களாக மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்த இருவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2 persons arrested under pocso act who are abuse a minor girl continuously 13 years in tirupur district

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலை பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது பெண். அதே பகுதியைச் சேர்ந்த இவரது பெரியப்பா தங்கராஜ்(50), பெரியம்மா மல்லிகா. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் அப்பெண் 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, மல்லிகாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அப்போது, தங்கராஜ் வீட்டுக்குச் சென்று அப்பெண் உதவிகள் செய்துவந்துள்ளார். இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தங்கராஜ், அப்பெண் சிறுமியாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இதையறிந்த அப்பெண்ணின் உறவினரான பிரகாஷும்(32) அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவ்வாறு கடந்த 13 ஆண்டுகளாக அப்பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

1 கிலோ தங்கத்தை வீடு வீடாக கொடுப்பதாக சொன்னாலும் திமுகவை யாரும் நம்ப மாட்டார்கள் - செல்லூர் ராஜூ

இந்நிலையில், அப்பெண்ணின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை அடுத்து பெற்றோர் விசாரித்தபோது, தங்கராஜும், பிரகாஷும் அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், தங்கராஜ் மற்றும் பிரகாஷ் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அதில், அப்பெண் சிறுமியாக இருந்ததில் இருந்து அவரை வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, போக்சோ வழக்கில் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அண்ணாமலை நடை பயணத்திற்கு டஃப் கொடுக்கும் மா. சுப்ரமணியன்; இது  என்னது புதுசா இருக்கு; நம்ம லிட்ஸ்லையே இல்லையே!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios