பட்டப்பகலில் காரை வழிமறித்து ஓட ஓட விரட்டி 2 பேர் படுகொலை..!

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 10, Jan 2019, 5:38 PM IST
2 people murder
Highlights

மணப்பாறை அருகே பட்டப்பகலில் மர்ம கும்பல் காரை வழிமறித்து அதில் இருந்த வழக்கறிஞர் உட்பட 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மணப்பாறை அருகே பட்டப்பகலில் மர்ம கும்பல் காரை வழிமறித்து அதில் இருந்த வழக்கறிஞர் உட்பட 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மதுரையைச் சேர்ந்த சிலம்பரசன் (வயது 33). இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர் ஜெகதீஷ் பாண்டி (30) வக்கீல். சிலம்பரசனுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர். 

இதற்காக நேற்று மதுரையில் இருந்து சிலம்பரசன், ஜெகதீஷ் பாண்டி மற்றும் ஜெயபாண்டி (32), ரபீக் (30), சவுந்தரபாண்டியன், சூரியபிரகாஷ் ஆகிய 6 பேரும் ஒரு காரில் அய்யர்மலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். கார் மணப்பாறை அடுத்த கலிங்கபட்டி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென மற்றொரு கார் முந்திச் சென்று வழிமறித்தனர். மற்றொரு காரில் இருந்து 6-க்கும் மேற்பட்ட கும்பல் ஜெகதீஷ் பாண்டி, சிலம்பரசன், ஜெயபாண்டி உள்ளிட்டவரை ஓட ஓட அரிவாளால் வெட்டினர். காரில் இருந்து  ரபீக், சவுந்தரபாண்டியன், சூரியபிரகாஷ் ஆகியோர் தப்பித்தனர்.

 

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜெகதீஷ் பாண்டி மற்றும் ஜெயபாண்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிலம்பரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

loader