சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவனுக்கு முதலாம் ஆண்டு நினைவு நாளில் நினைவு தூண் அமைத்த நண்பர்கள்..!

சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பகுதியை சேர்ந்த சுகந்தி (45),இவரது பேரன் ஷ்யாம் என்ற சிறுவனின் தாயார் உயிர் இழந்து விட்ட நிலையில் அவரது பாட்டி சுகந்தி வீட்டில் வளர்ந்து வந்தார். 

தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தபோது, கடந்த வருடம் இதே செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் ஷ்யாம் உயிர் இழந்துள்ளார். இந்த நிலையில் ஷியாமின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு அவரது சக பள்ளி மாணவர்களும், கொரட்டூர் பகுதி நண்பர்களும் அவனது நினைவாக அவனது வீட்டின் முன்பு நினைவு மண்டபம் அமைத்து அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அப்பகுதி நண்பர்களுக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி நண்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று அனைவரும் கண்ணீருடன் நினைவஞ்சலி செலுத்தினர். 

அவர் உயிர் இழந்து ஓராண்டாகியும் அவனது நினைவாக நினைவு தூண் அமைத்து இருப்பது கொரட்டூர் பகுதி மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.