பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மோதலின் போது அங்கிருந்தவர் துப்பாக்கியால் சுட்டார்.

டெல்லியில் பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 19 வயது சிறுவன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் துவாரகா பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

டெல்லியை அடுத்த துவாரகா பகுதியின் செக்டார் 16-இல் அக்‌ஷய் எனும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் எதிரே தான் நேற்று (சனிக்கிழமை) இந்த சம்பவம் நடந்தது என போலீசார் தகவல் தெரிவித்து இருக்கின்றனர். பள்ளி மாணவர்கள் இடையே அறியப்படாத பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டு இருக்கிறது. கடுயமைான மோதலின் போது அங்கிருந்தவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அங்கிருந்த குர்ஷித் உடலில் குண்டு பாய்ந்தது.

துப்பாக்கி சூடு:

இதில் சம்பவ இடத்திலேயே குர்ஷித் உயிரிழந்து விட்டார். அவரை துப்பாக்கியால் சுட்ட நபர் சாஹில் என்கிற மோனு என விசாரணையில் தெரியவந்துள்ளது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் போது மோனு துப்பாக்கி கொண்டு சுட்டதில் பலத்த காயமுற்ற குர்ஷித் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள தராக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குர்ஷித்தை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பின் அவர் ஏற்கனவே இறந்து விடத்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது, ஒருவர் பலி ஆகி இருக்கும் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இத்துடன் அவர்களிடம் இருந்து காலி காட்ரிட்ஜ் உடன், நாட்டு துப்பாக்கி ஒன்றை காவல் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு சாஹில் மற்றும் அவரது கூட்டாளிகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

போலீஸ் விசாரணை:

தலைநகர் டெல்லியில் பள்ளி மாணவர்கள் சண்டையில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கைது செய்யப்பட்டு இருக்கும் சாஹில் மற்றும் அவரின் கூட்டாளிகளிடம் காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பள்ளி மாணவர்களிடையே பிரச்சினை எழுந்ததற்கான காரணம், துப்பாக்கி பயன்படுத்தப்பட்டு இருப்பதை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது, இந்த சம்பவத்தில் வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.