19 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் சரியா என்ற கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண் கடந்த டிசம்பர் 31ம் தேதி தன் சகோதரியுடன் மோடாசா நகருக்கு சென்றுள்ளனர்,  அதில் ஒரு சகோதரி மட்டும் தனியாக வீடு திரும்பினார் மற்றொரு பெண் வீடு திரும்பவில்லை, மகள் வீடு திரும்பாததைக் கண்டு அதிர்சியடைந்த  குடும்பத்தினர் எங்கு தேடியும் அந்த பெண் கிடைக்கவில்லை , 

இதனை அடுத்து மகள் காணவில்லை என ஒரு பெற்றோர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர் .  ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடுவதற்கு பதிலாக வழக்குபதிவு செய்யாமல் அந்தப் உடன் சென்ற பெண்ணிடம்  விசாரித்தனர்  அப்போது பிமல் பர்வாட் என்பவர் அவரது காரில் பெண்ணை ஏற்றிச் சென்றதாக அந்த பெண் கூறினார் ஆனால் இதுகுறித்து யார் கேட்டாலும் வெளியில் சொல்லக்கூடாது என போலீசார் மிரட்டி அனுப்பியுள்ளனர்.  இந்நிலையில் அந்தப் பெண்ணின் பெற்றோர்களை அழைத்த போலீசார் காரில் கடத்திச் சென்ற நபருக்கும் உங்கள் பெண்ணுக்கும் தொடர்பு இருக்கிறது இருவரும் திருமணம் செய்து கொண்டு வருவார்கள் என கூறி அனுப்பியுள்ளனர் .  இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி சரியா பகுதியில் உள்ள மரம் ஒன்றில் அந்த காணாமல் போன பெண்  சடலமாக கிடந்தார். 

தன் மகள் மரத்தில் தொங்குவதை கண்டு அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர் .  தகவலறிந்து வந்த போலீசார் பெண்ணின் பிணத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது .  இந்நிலையில் வழக்கு பதிவு செய்ய மறுத்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உடனே குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இது குறித்து தெரிவித்துள்ள துணை டிஜிபி விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார்