மேலும் இருவர் அந்த அறையினுள் நுழைந்து அதே அறையில் உறங்கி கொண்டிருந்த ரியாவின் சகோதரியை தாக்க முற்பட்டனர்.

சூரத்தில் உள்ள சல்த்தான் பகுதியின் ராம் கபீர் சொசைட்டியில் வசிக்கும் 18 வயது மாணவி துணிச்சலுடன் செயல்பட்டதால், தனது உயிர் மட்டுமின்றி அவரின் வீட்டில் நடைபெற இருந்த கொல்லை சம்பவத்தையும் தடுத்து நிறுத்தி இருக்கிறார். 

சம்பவத்தன்று நள்ளிரவு 1.30 மணியளில் 18 வயதான மாணவி ரியா ஸ்வைன் தனது பரீட்சைக்காக படித்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் மின்வெட்டு ஏற்பட்டு இருந்த நிலையில், சிறு விளக்கு ஏற்றி வைத்து படித்துக் கொண்டிருந்தார். திடீரென ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த ரியா, மின்வெட்டு ஏற்பட்டு இருந்ததால் அதை சிரியாக கவனிக்கவில்லை. பின் சில நொடிகளில் கையில் கத்தியுடன் மர்ம நபர் ரியாவின் முன் தோன்றினான்.

மிரட்டல்:

இதேடு கட்டிலில் மிக வேகமாக ஏறிய மர்ம நபர் ரியாவின் கழத்தில் கத்தியை வைத்து மிரட்ட தொடங்கினான். இதை அடுத்து மேலும் இருவர் அந்த அறையினுள் நுழைந்து அதே அறையில் உறங்கி கொண்டிருந்த ரியாவின் சகோதரியை தாக்க முற்பட்டனர். இந்த சமயத்தில் ரியா கழுத்தில் கத்தி வைத்திருந்தவனின் கவனம் சிதறியது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரியா தனது இடது கையால் மர்ம நபர் கையில் இருந்த கத்தியை வேகமாக கீழே தட்டி விட்டார்.

தப்பி சென்றனர்:

இவ்வாறு செய்ததில் ரியாவின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதோடு கத்தியை தட்டிவிட்டதும், அருகில் இருந்த தனது சகோதரியை தனக்கு அருகில் இழுத்துக் கொண்டு பின் குடும்பத்தாரை எழுப்ப கத்தி கூச்சலிட்டார். இவரின் குரலை கேட்டு எழுந்த ரியாவின் தாய் அந்த அறையினுள் வர முற்பட்டார். எனினும், வீட்டில் மற்றவர்கள் எழுந்துவிட்டதை அறிந்து கொண்ட கொல்லையர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தில் தனது உயிர் மட்டுமின்றி, குடும்பத்தாரையும் காப்பாற்றிய ரியாவின் கைகளில் 24 தையல்கள் போடப்பட்டது. "எனது உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், சகோதரியை காப்பாற்றவும், கொல்லையை தடுக்கவும் எனது தைரியத்தை நான் இழக்கவில்லை," என ரியா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.