சாதி விட்டு சாதி காதல் திருமணம் செய்துகொள்ளும் காதலர்லால், தங்களது சாதி கவுரவம் அழிந்ததாக,  அவர்களது குடும்பத்தினர் ஆவணக்கொலை செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் சாதி பெண்ணை திருமணம் செய்த தங்கையை சுட்டுக்கொன்ற அண்ணன் போலீசில் சரணடைந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் புல்புல், இவர் அதே ஊரைச் சேர்ந்த குல்தீப் ராஜா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் தீவிரமாக காதலித்து நிலையில், இந்த தகவல் பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்தது. இவர்களின் காதலுக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டுள்ளார். தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார் புல் புல். 

இந்நிலையில், தனது அம்மாவைப் பார்க்க ஆசைப்பட்ட புல்புல், கணவனிடம் சொல்லிவிட்டு பெற்றோர் வீட்டுக்கு தன் கணவனுடன் வந்தார். இருவரும் வீட்டில் விருந்து சாப்பிட்டு விட்டு திரும்பிய நிலையில், அவர்களின் புல்புல் சகோதரர் பின்னாடியே வந்துள்ளார். அவர்கள் இருக்கும் இடத்தை கண்டு பிடித்துக் கொண்ட ஒரு கர்ப்பிணிப் பெண் என்றும் பார்க்காமல் தலையில் சுட்டுள்ளார். ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சாய்ந்த  மனைவியை பார்த்த கணவன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் புல்புல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து தந்தையைக் கொன்ற புல்புல் அண்ணன் போலீசில் சரணடைந்துள்ளார். 

இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் வேறு சாதி ஆணை காதலித்த தாவரங்களில் குலப்பெருமை கௌரவம் சிதைந்து போனது. இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்தோம்,  அது மட்டுமல்ல அவளின் வயிற்றில் வளர்ந்த குழந்தையை நாங்கள் விரும்பவில்லை இதற்காகவே என் தங்கையை கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழகம் மற்றும் ஆந்திராவில் இப்படி ஆவணகொலைகள் அடுக்கடுக்காக நடக்கும் நிலையில் தற்போது மத்திய பிரதேசத்திலும் நடந்துள்ளது. அதுவும் கர்ப்பிணிப்பெண்ணை கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.