17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.. வசமாக சிக்கிய 5 இளைஞர்கள்.. வீடியோ வெளியிட்டு கதறல்..!

கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி அங்குள்ள காட்டுப்பகுதியில் மாடுமேய்க்க சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதை செல்போனில் வீடியோ பதிவு செய்து அவ்வப்போது மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். 

17 year old girl gang raped.. 5 youths arrested

சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் 5 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம்  பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோவூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. பெற்றோர் இல்லாமல் உறவினர்கள் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார். இந்நிலையில்,  சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி அங்குள்ள காட்டுப்பகுதியில் மாடுமேய்க்க சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதை செல்போனில் வீடியோ பதிவு செய்து அவ்வப்போது மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். 

மேலும், தங்களது ஆசைக்கு இணங்க வேண்டும் என அடிக்கடி தொந்தரவு செய்துள்ளனர். இதனால், செய்வதறியாமல் திகைத்து போன சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனையடுத்து, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் 5 இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தததை, வீடியோவாக எடுத்து மிரட்டியதால், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக சிறுமி அதிர்ச்சி தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக  5 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதனிடையே குணமடைந்து வீடு திரும்பிய சிறுமி, தன்னிடம் தவறாக நடந்துகொண்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட காவல் எஸ்பி ஆகியோருக்கு அந்த சிறுமி நன்றி தெரிவித்துள்ளார். பெற்றோர் இல்லாமல் மிகவும் வறுமை உள்ளேன். எனவே, தனக்கு உதவி செய்ய முதல்வரை சந்திக்கவேண்டும் என்று சிறுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios