ஹறியானானாவில் வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை மூன்று பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
ஹறியானானாவில் வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை மூன்று பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹரியானாவில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிறுமி, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். கடந்த 1 ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, உள்ளே நுழைந்த 3 மர்ம நபர்கள், பெண்ணை கடத்திச் சென்று அருகிலுள்ள பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நிகழ்ந்து அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அந்த சிறிமி தனது வீட்டின் கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுக்குறித்து பத்ராவின் நிலைய குடியிருப்பு அதிகாரி இன்ஸ்பெக்டர் சந்தர் சேகர் கூறுகையில், பல மணி நேரங்களுக்குப் பிறகு அவர் தனது வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சிறுமியும் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். முக்கிய குற்றவாளி அவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடத்தல், கூட்டுப் பலாத்காரம், தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) சட்டம் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் தற்கொலை செய்துக்கொண்டசிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றச்சமபவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்களை கைது செய்வதில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுமட்டுமின்றி இந்த சம்பவம் குறித்த விசாரணையும் முடக்கிவிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
