சென்னையில் வீட்டை விட்டு ஓடிவந்த சிறுமியிடம் ஆதரவாக பேசி ரயிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் பெற்றோரிடம் சண்டை போட்டுக்கொண்டு கோபமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தெரியாமல் வேற மாநிலத்திற்கு சென்றுவிடலாம் என்று நினைத்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். அப்போது ஜம்மு காஷ்மீரில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த வடமாநிலத்தை சேர்ந்த மோகன்லால் (30). என்பவரை எதார்த்தமாக சந்தித்துள்ளார். 

மோகன்லால் பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காததால் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல சென்ட்ரல் வந்துள்ளார். அப்போதுதான் சிறுமியை சந்தித்துள்ளார். அவரிடம் பேச்சுக்கொடுத்த மோகன்லால், சிறுமி வீட்டை விட்டு வெளியேறி வந்த தகவலை அறிந்துகொண்டார்.  கவலைப்படாதே.. உன்னை நான் காஷ்மீர் அழைத்து செல்கிறேன். உன்னை நல்லபடியாக வைத்துக்கொள்கிறேன். அங்கு உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். இதை நம்பி சிறுமியும் அவருடன் சென்றார்.

அப்போது, ரயிலில் ஏற்றிய மோகன்லால் திடீரென அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சத்தம் கேட்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக இருவரையும் அழைத்து விசாரித்தனர். விசாரணையில் அந்த சிறுமி வடமாநில வாலிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறினார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வடமாநில இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.