திருமண ஆசைக்காட்டி பலமுறை பலாத்காரம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி கர்ப்பமடைந்ததை தொடர்ந்து அதற்கு காரணமான இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, திருவான்மீயூரைச் சேர்ந்தவர் ராஜேஸ். இவருக்கு 15 வயதுடைய பெண் ஒருவர் உள்ளார். 10 ஆம் வகுப்பு படித்து விட்டு வீடடில் இருக்கும் இந்த சிறுமி, அருகில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க செல்வார். 

அப்போது கடையில் வேலை பார்த்து வரும் 24 வயத இளைஞரான பெருங்குடியைச் சேர்ந்த தியாகராஜன் (எ) சீனுவுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கிடையேயான இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. காதல் மயக்கத்தில் இருந்த சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாக தியாகராஜன் உறுதி கூறியுள்ளார். இவரது பேச்சை நம்பிய சிறுமியும், தியாகராஜனுடன் நெருங்கி பழகியுள்ளார். 

திருமண ஆசைகாட்டி சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் தியாகராஜன்.இந்த நிலையில், சிறுமிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. சிறுமியின் நிலையைப் பார்த்த பெற்றோர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறினார். 

இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். தனது கர்ப்பத்துக்கு காரணம் கடையில் வேலை பார்க்கும் தியாகராஜன்தான் என்று சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, தியாகராஜன் மீது புகார் அளிக்கப்பட்டது. அவர்களது புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.