வேலை வாங்கி தருவதாக சிறுமியை கூட்டுச்சென்று விடுதியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கேரள மாநிலம் கோழிக்கோடு கக்கடாம்பொய்யில் என்ற பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் சிறுமியை ஏமாற்றி அழைத்து வந்துள்ளனர். அப்போது, சிறுமியை விடுதி வைத்து பலவந்தமாக மாறி மாறி பலாத்காரம் செய்தனர். 

உடனே இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தில் மலப்புரம் பூக்கோட்டூர் பகுதியைச் சேர்ந்த மன்சூர் (28), நிசார்பாபு, (38) மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர் முகமது பஷீர் (50) ஆகியோரை கைது செய்தனர். இதற்கு உதவியாக இருந்த ஹர்சானா (25) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், இதில், வேறு யாருக்காவது தொடர்ப்புள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தங்கும் விடுதியில் சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்து வந்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.