தந்தைக்கு மது வாங்கி கொடுத்து அவரது மகளை இளைஞரொருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 25 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர் .  கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் 45 வயதான மீன்பிடி தொழிலாளி ,  அவருடன்  மின்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தவர் அதே பகுதியை சேர்ந்த 36  வயதான ஆரோக்கிய ஜூன் ,  இருவரும் அன்றாடம்  பணி முடித்துவிட்டு  மது அருந்துவது வழக்கம் . 

இந்நிலையில் ஆரோக்கிய ஜூன் ஒரு நாள் தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார் .  அப்பொழுது இந்த மீன்பிடி தொழிலாளிக்கு  பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இருப்பதை ஆரோக்கியம் கண்டுள்ளார் .  அத்துடன் அந்தப் பெண்ணின் தாய் மற்றும் சகோதரருக்கு காது மற்றும் வாய் பேச முடியாது என்பதையும் அறிந்து கொண்ட ஆரோக்கிய ஜூன்,  அந்த பெண்ணை அடைய திட்டமிட்டதுடன் சம்பவத்தன்று  பெண்ணின் தந்தையும் தனது நண்பருமான மீன்பிடி தொழிலாளிக்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்துள்ளார் .  அதிக மது குடித்து அந்தபெண்ணின் தந்தை மதுபோதையில் மயங்கினார்.   இந்நிலையில் வீட்டில் இருந்த 11ஆம் வகுப்பு  மாணவியை மிரட்டிய ஆரோக்கிய ஜூன்,  அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .  பின்னர் அங்கு நடந்ததை யாருக்கும் சொல்லக்கூடாது என  அந்த மாணவியை மிரட்டியதுடன் ஆரோக்கிய ஜின் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.   பின்னர் தந்தைக்கு போதை தெளிந்த பின்னர் அவரிடம் சிறுமி தனக்கு நடந்ததை கூற அதிர்ந்து போன அந்த மீன்பிடி தொழிலாளி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆரோக்கிய ஜூன் மீது புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆரோக்கிய ஜூன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர் . இந்நிலையில் தன்னை போலீசார் தேடுவதை அறிந்து கொண்ட அந்த நபர் .  தலைமறைவானார்.   ஆனாலும் போலீசார் விடாப்பிடியாக தேடி வந்ததால் அந்த அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார் உயிருக்குயிராய் பழகிய  நண்பருக்கு மது வாங்கி கொடுத்து அவரது மகளையே பாலியல் பலாத்காரம் செய்துள்ள  சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .